இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் சந்திர ரூபசிங்க குணவர்த்தன

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் சந்திர ரூபசிங்க குணவர்த்தன (வயது 73) இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றார். இவர் நாட்டின் 27ஆவது பிரதமராவார்.

இவர், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியில் கற்றார். இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாடசாலை நண்பராகவும் இவர் திகழ்ந்தார். உயர்நிலைக் கல்வியை ஓரிகன் பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர், சர்வதேச வணிகத்தில் பி. பி. ஏ. பட்டம் பெற்றார்.

1973ஆம் ஆண்டு மாகஜன எக்சத் பெரமுன கட்சியின் மத்திய குழு உறுப்பினரான இவர், 1974இல் பொதுச்செயலாளராக உயர்ந்தார். 1977 பாராளுமன்ற தேர்தலில் தோல்வயிடைந்தார். 1983இல் மஹரகம தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வென்று மகாஜன எக்சத் பெரமுனவின் சார்பில் பாராளுமன்றுக்கு நுழைந்தார்.

1989, 1994 தேர்தல்களில் மீண்டும் தோல்வியைடந்தார். 2000ஆம் ஆண்டு மக்கள் கூட்டணியுடன் இணைந்தது மகாஜன எக்சத் பெரமுன. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் வென்று மீண்டும் பாராளுமன்றம் சென்ற, முதன்முறையாக அமைச்சராகவும் ஆனார். அவருக்கு போக்குவரத்து, சுற்றுச்சூழல் அமைச்சுக்கள் வழங்கப்பட்டன.

2004இல் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சரானார். 2010இல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரானார். 2015 மகிந்த ராஜபக்ஷவின் பக்கம் எதிர்க்கட்சியில் இருந்தமையால் அமைச்சு பதவி எதையும் வகிக்கவில்லை. 2020ஆம் ஆண்டு வெளியுறவு, கல்வி, பொதுநிர்வாக அமைச்சராக பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் சந்திர ரூபசிங்க குணவர்த்தன

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More