
posted 15th November 2021
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 716 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 49 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 381 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 23 ஆயிரத்து 503 ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்று உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,995 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 549,500 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 426 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 523,929 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நாட்டில் இதுவரையில் 551,343 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 426 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 523,929 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 13,995 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்