இந்திய அரசாங்கம்  மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இரண்டு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட இந்த மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் நந்தகுமாரிடம் நேரடியாக வழங்கி வைத்தார்.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் இந்திய துணைத் தூதரகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ். போதனா மருத்துவமனையின் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் இந்திய துணை தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய அரசாங்கம்  மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY