“ஊழி" திரைப்பட பாடல்  வெளியீடு

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

"ஊழி" திரைப்பட பாடல் வெளியீடு

“ஊழி" திரைப்பட பாடல் நேற்று (08) புதன் கிழமை பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது

தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் குறித்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகளை சுமந்த குறித்த திரைப்படம் மே 10ம் திகதி 16 நாடுகளில் 70 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கதை, திரைக்கதையுடன் ஜோசப் ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகவுள்ள குறித்த திரைப்படத்தின் பாடல்களே வெளியீடு செய்யப்பட்டன.

ஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் கவி வரிகளில் உருவான பாடலுக்கு இந்திய பாடகர்களின் குரலிற்கு புதிய இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

குறித்த பாடல் இறுவெட்டினை ஈழப்பாடகி பார்வதி சிவபாதம் மற்றும் ஈழ இசையமைப்பாளர் செயல்வீரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தனர்.

குறித்த நிகழ்வில், முன்னாள் வடமாகாண சபை கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன், ஊழி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த சட்டத்தரணி சுகாஸ், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ், பாடல் ஆசிரியர் தீபச்செல்வன் உள்ளிட்ட கலைஞர்கள் பலரும் அனுபவ உரையாற்றினர்.

“ஊழி" திரைப்பட பாடல் வெளியீடு

“ஊழி" திரைப்பட பாடல்  வெளியீடு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 13.12.2025

Varisu - வாரிசு - 13.12.2025

Read More
Mahanadhi - மகாநதி - 11 - 12.12.2025

Mahanadhi - மகாநதி - 11 - 12.12.2025

Read More
Varisu - வாரிசு - 12.12.2025

Varisu - வாரிசு - 12.12.2025

Read More
Varisu - வாரிசு - 11.12.2025

Varisu - வாரிசு - 11.12.2025

Read More