15வது பொதுப் பட்டமளிப்பு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

15வது பொதுப் பட்டமளிப்பு விழா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதல் நாள் நிகழ்வு இன்று (13) நடைபெற்றது இரண்டாம் நாள் நிகழ்வு நாளை நடைபெறவிருக்கின்றது. இன்றைய பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுவக்கர் தலைமையிலும் வேந்தர் கௌரவ பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையிலும் இடம்பெற்றது.

இன்றைய முதல் நாள் பட்டமளிப்பு விழாவில் களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க பிரதம பேச்சாளராக கலந்து கொண்டார்.

இம்முறை பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இரண்டு நாட்களுக்கு ஐந்து அமர்வுகளாக நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

இன்று முதல் அமர்வில் கலை கலாசார, தொழில்நுட்ப பீடங்களைச் சேர்ந்த 395 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இரண்டாவது அமர்வில் முகாமைத்துவ – வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 371 மாணவர்களும், மூன்றாவது அமர்வில், இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 380 மாணவர்களும் பட்டங்களை பெற்றனர்.

இரண்டாம் நாள் அமர்வில் (நான்காவது அமர்வில்) பிரயோக விஞ்ஞானங்கள், பொறியியல் ஆகிய பீடங்களைச் சேர்ந்த 332 மாணவர்கள் பட்டங்கள் பெறவுள்ளனர். ஐந்தாவது அமர்வில் கலை கலாசார, முகாமைத்துவ - வர்த்தக பீடங்களில் இணைந்து கல்வி கற்ற 374 வெளிவாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், வியாபார நிருவாகம், முகாமைத்துவம், தமிழ் உள்ளிட்ட துறைகளில் பட்டப்பின்படிப்புக்களை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதுமாணி, முதுதத்துவமாணி பட்டங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

15வது பொதுப் பட்டமளிப்பு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

15வது பொதுப் பட்டமளிப்பு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
15வது பொதுப் பட்டமளிப்பு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
15வது பொதுப் பட்டமளிப்பு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
15வது பொதுப் பட்டமளிப்பு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More