தேனாக மாறிய சீனிப்பாணி

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வவுனியாவில் சீனிப்பாணியை காய்ச்சி, அதனை தேன் என்று கூறி விற்பனை செய்தவரை சுகாதாரப் பிரிவினர் சுற்றிவளைத்துப் பிடித்ததோடு, அவரிடமிருந்து 41 லீற்றர் சீனிப்பாணியை கைப்பற்றினர்.

தேன் என சீனிப்பாணியை விற்பனை செய்வதாக வவுனியா சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொது சுகாதார பரிசோதகர்கள் காத்தான்கோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்தனர்.

இதன்போது அந்த வீட்டில் விற்பனைக்கு தயாரான நிலையில் மொத்தமாக 41 லீற்றர் சீனிப்பாணி நிரப்பப்பட்ட 55 போத்தல்களையும், சீனிப்பாணி காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்தே சீனிப்பாணி விற்பனை செய்தவரை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதானவர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 10ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

தேனாக மாறிய சீனிப்பாணி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)