
posted 15th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஐக்கிய காங்கிரஸ் ஆதரவு
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொத்துவில் பிரதேசத்தில் பொது மைதானம் ஒன்றை அமைத்துத்தருமாறு கோரி இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
பொத்துவில் பிரதேசத்தில் பொது மைதானம் ஒன்றை அமைத்துத் தருமாறு கோரி பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு முன்னால் கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக இடம் பெற்று வரும் இளைஞர்களுடைய போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக இன்று ஐக்கிய காங்கிரஸ் கட்சியினுடைய கிழக்கு மாகாண செயற்பாட்டாளர் எம். சி. அஹமட் புர்க்கான் அவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியதுடன் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேசங்களில் உள்ள இளைஞர்கள் அனைவரையும் இந்த போராட்டத்தில் கலந்து குறித்த போராட்டம் வெற்றி பெற உதவுமாறு அழைப்பு விடுத்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)