
posted 8th March 2022
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல் ) அவர்களின் வழித்தோன்றல் கேரளா மூத்த அரசியல் தலைமை கண்ணியத்துக்குரிய ஹைதர் அலி ஷிஹாப் தங்கள் இவ்வுலகை விட்டு மறைந்த செய்தி ஆழ்ந்த கவலையளிக்கிறது. மலையாள மண்ணைப் பொறுத்தவரை முஸ்லிம்களும் ஏனையோரும் மதித்துப் போற்றும் ஒருவராக அன்னார் வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ,முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தாய் சபை அரசியல் ஆலோசனைக்குழு தலைமைப் பதவி வகித்த தங்கள் அவர்கள் கட்சியின் கேரள மாநிலத் தலைவராகவும் பங்களிப்புச் செய்து அதன் வளர்ச்சியில் கரிசனையுடன் செயலாற்றியிருக்கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் மதிப்புக்குரிய கே .எம். காதர் மொகிதீன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அவர் உறுப்பினர்களை சிறப்பாக அரவணைத்துச் சென்றுள்ளார் என அறிகின்றோம்.
அன்னாரின் இளைய சகோதரர் சாதிக் அலி தங்கள் ஏனைய தமிழக மற்றும் கேரள அரசியல் பிரமுகர்களுடன் இலங்கை வந்து எனது கனிஷ்ட புதல்வியின் திருமண நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார் .
எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்த ஹைதர் அலி ஷிஹாப் தங்கள் அவர்களுக்கு மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸுல் அஃலா என்ற சுவன பாக்கியத்தை அருள்வானாக .
அத்துடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு மன ஆறுதலையும் அளிப்பானாக .
இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House