இஸ்லாமிய புத்தாண்டு

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இஸ்லாமிய புத்தாண்டு

இலங்கையில் முஹர்ரம் மாத தலைப்பிறை தென்பட்டதையடுத்து இஸ்லாமிய புத்தாண்டான ஹிஜ்ரி 1445 ஆரம்பமாகியுள்ளது.

ஹிஜ்ரி 1444 ஆம் வருடம் கடந்த 1445 ஆம் புதுவருடத்தில் கால்பதித்துள்ள நிலையில், உலக முஸ்லிம்கள் பரஸ்பரம் இஸ்லாமிய புதுவருட வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதேவேளை இலங்கையிலுள்ள முஸ்லிம் அமைப்புக்கள் உட்பட முஸ்லிம் அரசயில்வாதிகள் மற்றும் பிரமுகர்களும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய புதுவருட நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்pனருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள இஸ்லாமிய புதுவருட வாழ்த்துச் செய்தியில்,

முஹர்ரம் மாத தலைப்பிறை தென்பட்டதை அடுத்து, இஸ்லாமியப் புத்தாண்டு ஹிஜ்ரி 1445 ஆரம்பமாகியுள்ளது. இஸ்லாமிய வருடக் கணிப்பில், இறுதி மாதமான துல்ஹஜ் தியாகத்தின் வலிமையை வலியுறுத்தியவாறே மறைய, முதல் மாதமான முஹர்ரமும் தியாகத்தின் சிறப்பை உணர்த்தியவாறே உதிக்கின்றது.

அனைவருக்கும் மகத்தான இஸ்லாமியப் புத்தாண்டு, ஹிஜ்ரி 1445 வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

யஹியாகான்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என முஸ்லிம் காங்கிரஸின் பதில் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1444 - புது வருடம் மிக துரிதமாக எம்மை கடந்து சென்று - இன்று 1445 எனும் புது வருடத்தில் கால் பதிக்கின்றோம்.

இந்த கால இடைவெளியில் நாம் , நமக்காகவும் சமுகத்திற்காகவும் ஆற்றிய பங்களிப்பு என்ன ? என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் தத்தமது மனச்சாட்சிப்படி சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம்.

கடந்த காலங்களில் முஸ்லிம் சமுகம் - உலகளாவிய ரீதியில் எதிர்கொண்ட அத்தனை கசப்பான - துயரமான நிகழ்வுகளும் இந்த இனிய இஸ்லாமிய புதுவருடத்துடன் இல்லாதொழிந்து நிம்மதியும் அமைதியுமான வாழ்க்கை எம்மை வந்தடைய இந் நன்நாளில் பிரார்த்திப்போம்.

அன்பர்கள் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் இதயங் கனிந்த இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய புத்தாண்டு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)