பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன் ஜெனரல் (ஓய்வு) ஹமூத் உஸ் சமான் கான் (Lt Gen (Retired) Hamood uz Zaman Khan) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று (03) நடைபெற்ற மூன்றாவது இலங்கை - பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சிநேகபூர்வமாக வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)