
posted 6th January 2023
Thank you Hon. Presiding member, the minister for Justice, Constitutional affairs and prisons reforms has moved 2nd reading on the bill titled “Recovery of possession of premises” given on lease. More than the bill that he has moved, it is the bill that he did not move that is of concerned.
Nevertheless, I just want to say something on the bill that has been moved. In our experience, it is state institutions in the past that have entered into lease agreements with persons who are friendly with the government of the day, and those lease agreements did not have a termination clause; deliberately done. Now no self-respecting lawyer or Notary will not prepare a lease agreement that does not have termination clause, but the UDA did that. And so this is a welcome move, that even if a termination clause is not there it can now, under the law can be terminated for default and so on.
But the bill that he did not move is a bureau of rehabilitation bill. The government seems to have some kind of obsession with this bureau that they want to create. The Supreme Court this time round has made an excellent determination on this bill. I have said this is this house before also in relation to this particular determination. This determination like one other determination in the past that I am aware of the Sri Lanka Broadcasting authority bill, specifically says that his bill as a whole violates the constitution.
Nevertheless, since it’s their constitutional duty to specify what provisions need a two thirds majority? what provisions need a referendum? In addition, and how those can be remedied. They have made certain suggestions. And the government although the bill has been looked upon as something obnoxious to the rule of law and constitutionalism, still wants to pursue this. So that’s a concern. Even today, the minister did not withdraw the bill. The minister, only put it off and has said that they’ll take certain concerns before finalising this bill.
Now one of the important concerns we have is as to who constitutes this bureau? It can’t be the military. If you want to rehabilitate drug dependence, I don’t understand what the military or security officials have to do with that. It has to be experts in that area and it’s not an easy task to rehabilitate drug dependence. The Supreme Court has very specifically struck down different categories of persons to be subjected to this and said for drug dependence it can or any other person identified by law, meaning that such a person today should have been identified by law. Not for in committee stage amendments to say drug dependence or any other persons to be identified by law, that is keeping the whole field open, which is what you wanted to do in the first place, which is what has been disallowed by court.
Therefore, the constitutionality of that phrase is a serious question. I say that it cannot be enacted in that way. That will violate the caution expressed by the Supreme Court. There is another fundamental issue that I want to address to the minister.
When a person is deprived of his personal liberty that must happen only after a judicial pronouncement. Now this is a departure from that note. Here we are envisaging a situation where without court finding a person guilty of certain things that that person can be incarcerated. I am using that word advisedly because he has been deprived of his personal liberty, there are provisions in the bill that says that if he runs away, you can catch him and bring him back. The one important fundamental in a drug rehab programme is the voluntariness of the person. That the person must want to be rehabilitated. You can’t force it down his throat. So, in addition to a judicial pronouncement in a matter where drug dependency is concerned, we must also have a medical opinion.
Both those conditions attached then you can set up a rehabilitation centre. But, it must be administered run by experts in that field, not security experts.
தமிழ் வடிவம்
இன்றைக்கு நாங்கள் ஒரு பேச்சு வார்த்தையிலே ஈடுபட ஆரம்பித்திருக்கிறோம். ஜனாதிபதி அவர்கள் நவம்பர் மாதம் வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாத முதலாம் நாள் நான் உரையாற்றிக்கொண்டிருந்தபோது இந்த விடயத்தைப்பற்றி எழுந்து பேசி மற்ற கட்சித் தலைவர்களோடு கலந்தாலோசித்து, வரவு செலவு திட்ட விவாதம் முடிவடைந்தவுடனேயே நாங்கள் சந்திக்கலாம் என்று சொல்லி சர்வ கட்சி மாநாடொன்றை டிசம்பர் 13ம் திகதி ஆரம்பித்து வைத்தார். அதிலே பலரும் இதனைத் தீர்க்கவேண்டும்,தமிழ் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வரவேண்டும், உடனடி பிரச்சினைகளுக்கு தீர்வு வரவேண்டும் என பல முற்போக்கான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள் அதிலே குறிப்பாக நீதி அமைச்சர் பிரதான பங்கு வகிக்கிறார். இன்றைக்கு சிறையிலே தொடர்ச்சியாக பல காலமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிற தமிழ் கைதிகளின் விடுதலை, அதிலே முக்கியமானதொன்று. காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி இன்னொன்று. எங்களுடைய நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுவது மிகவும் பிரதானமான ஒரு விடயம்.
ஆகவே நல்லிணக்கத்தை நாங்கள் ஒரு அரசியல் தீர்வு மூலமாக அடையலாமா இல்லையா என்பதை பெப்ரவரி 4ம் திகதிக்கு முன்னர் தெரிந்துகொள்ள வேண்டும், அதை நான் நாட்டுக்கும் உலகத்திற்கும் அறிவிக்கப்போகிறேன் என்று ஜனாதிபதி சொல்லுவதிலே நங்கள் இந்த விடயங்கள் முதலிலே தீர்க்கப்படவேண்டும் ஆனால் அதே வேளையிலே இறுதித் தீர்வு என்ன என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையாக நாங்கள் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். இன்று பின்னேரமும் ஒரு ஆயத்தக்க கூட்டமொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றது, நாங்கள் அதற்குப் பிறகு 10ம் திகதியிலிருந்து பேச்சுவார்த்தையினை நடாத்தவிருக்கிறோம், இந்த வேளையிலே, எங்களுடைய கட்சியின் சார்பாக சில முக்கியமான விடயங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன். நாங்கள் தொடர்ச்சியாக, ஒரு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வைக் கோரி நிற்கின்றோம். அர்த்தமில்லாத அதிகாரப்பகிர்வு எவருக்கும் தேவையில்லை. அர்த்தமில்லாதிருந்தால் அது அதிகார பகிர்வே கிடையாது. ஆகவே அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு, ஒரு சமஷ்டி கட்டமைப்பினால் மட்டும்தான் முடியும் என்பதை திரட்டவட்டமாக நாங்கள் சொல்லுகிறோம்,அதை சொல்லிக்கொண்டிருக்கும் போதுதான் இதை தீர்க்க முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கையோடு வெளிப்படுத்தியிருக்கிறார். அதைச் சொல்லுகிறார், அதற்கான காலக் கெடுவையும் அவரே தீர்மானித்திருக்கிறார். வருகிற மாதம் 4ம் திகதிக்கு முன்னர் இது செய்யப்படவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நாங்கள் அந்தக் காலக் கெடுவுக்கு இணங்கியிருக்கின்றோம். ஏனென்றால் இது சம்பந்தமாக 35 வருடமாக பேசி பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன, பல இணக்கப்பாடுகள் ஈட்டப்பட்டிருக்கின்றன. அதை நடைமுறைப்படுத்துவதே தேவையானது தவிர புதிதாக நாங்கள் ஆரம்பத்திலேயிருந்து தொடங்கவேண்டியதில்லை. ஆகவே, திரும்பவும் இந்த வருட ஆரம்பத்திலே இந்த பேச்சுவார்த்தையில் இன்றைக்கும் சென்று அதற்கான ஆயத்தங்களை செய்கிற வேளையிலே எங்களுடைய நிலைப்பாட்டை நாட்டுக்கும் உலகத்துக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்தக் கால கெடுவுக்குள்ளே இது முடிய வேண்டும், அது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக இருத்தல் வேண்டும் ஆனால் நிச்சயமாக தமிழ் தேசிய பிரச்சினை தீருகிறது என்று சொல்கின்ற போது தமிழ் மக்களுடைய நியாயமான அபிலாஷை அதனாலே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
இல்லையென்று சொன்னால் இது காலத்தை இழுத்தடிக்கும் ஒரு செயற்பாடாக இருக்குமென்று சொன்னால், எங்களுக்கு பலத்த சந்தேகங்கள் இருக்கின்றன, சந்தேகங்களோடுதான் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் என்பதையும் திரும்பத்திரும்ப நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். சந்தேகத்தோடுதான் வருகிறோம். ஏனென்றால் பல தடவைகள் இப்படியான முயற்சிகள் எடுக்கப்பட்டு எதுவுமே முடிவடையாத ஒரு நிலையிலே பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வர மறுத்தோம் என்ற ஒரு பழிச் சொல் எங்களுக்கு வரக்கூடாது என்பதற்காக நாங்கள் இதயபூர்வமாக இதய சுத்தியோடு நங்கள் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக சொல்லியிருக்கிறோம், ஆனால் அதனை செய்யத் தவறுமாக இருந்தால், அதனுடைய முழுப் பொறுப்பையும் அரசாங்கம் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்தக் காலக்கெடுவுக்குள்ளே இது செய்யப்படாவிட்டால் நாங்கள் அடுத்ததடுத்த நடவடிக்கைகள் குறித்து வெளிப்படுத்துவோம், இந்த கால கெடுவுக்குள் இதனை செய்து முடிக்க இயலாது என்று தெரிந்துகொண்டே எங்களை ஏமாற்றுகிற நாடகத்தினை அரசாங்கம் அரங்கேற்றுகிறது என்று பலர் எங்களுக்கு எச்சரிக்கிறார்கள். அப்படியாக இருக்கவும் கூடும், ஆனால் ஒரு சிறிய காலக்கெடு, இந்த சிறிய காலக்கெடுவில் அது எமக்கு தெரியவரும், அப்படியாந ஒரு செயற்பாடாக இது இருக்குமாக இருந்தால், நாட்டினுடையதும் சர்வதேசத்தினுடையதும் கண்களிலே மண்ணைத் தூவுகிறமாதிரியான ஒரு செயற்பாடாக அரசாங்கம் இதைச் செய்யுமாக இருந்தால், அது தெட்டதத்தெளிவாக வெளிப்படுத்தப்படும், அதனை உலகத்திற்கு நாங்கள் பறை சாற்றுவோம், உலகத்திற்கு சொல்லுகிறது மட்டுமல்ல, நாட்டிலேயே எங்களுடைய மக்களை அணி திரட்டி, எங்களுடைய நியாயமான அரசியல் சுதந்திரத்திற்காக நாங்கள் வெவ்வேறு வழிகளில் போராட்டங்களை முன்னெடுப்போம், இது ஜனாதிபதி கொடுத்த காலக்கெடுவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக விடுக்கப்படுகிற எச்சரிக்கையாகக் கூட அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம். நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)