வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டுக் குழு அங்கு அட்டகாசம் செய்துள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குறித்த குழு வீட்டின் கதவுகள்,ஓட்டோ, மீன் தொட்டி, தண்ணீர்க் குழாய், கதிரைகள் மற்றும் வேலித் தகரங்கள் என்பவற்றை வாளினால் வெட்டி சேதப்படுத்தியுள்ளது.

அந்தக் கும்பல் ஓட்டோவுக்கு தீ மூட்டியுள்ளது. ஓட்டோ மூடியிருந்த பொலித்தீன் எரிந்துகொண்டிருந்தவேளை வீட்டிலிருந்தவர்கள் அந்த பொலித்தீனை கீழே இழுத்து விழுத்தினர். இதனால் ஓட்டோ பாரிய பாதிப்புக்கு உள்ளாகவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ். தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House