விலை குறைக்கப்பட்ட சமையல் எரிவாயு

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

விலை குறைக்கப்பட்ட சமையல் எரிவாயு

இலங்கையில் நேற்று (04) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாவனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்துள்ளமை, டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளமை மற்றும் விலைச் சூத்திரம் என்பவற்றின் அடிப்படையில் சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி செவ்வாய் (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவாலும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 402 ரூபாவாலும், 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 183 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 4743 ரூபாவாக விற்பனையான 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 3739 ரூபாவாகக் குறைவடைந்துள்ளதுடன், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1502 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 700 ரூபாவாகவும் குறைவநடைந்துள்ளது.

இதேவேளை லிட்ரோ நிறுவனம் சமையல் எரியாவு விலைகளைக் குறைத்துள்ளதையடுத்து லாப் நிறுவனமும் சமையல் எரிவாயுவுக்கான விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

நாட்டில் வாழ்க்கைச் செலவு உயர்வால் மக்கள் பெரும் துயருக்குள்ளாகியிருக்கும் தற்போதய நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைக்குறைப்பை பொது மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளதுடன், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

விலை குறைக்கப்பட்ட சமையல் எரிவாயு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)