111 கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டன | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் 111 கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் காணியொன்றினை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழவுக்குட்படுத்திய நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் கைக்குண்டுகளை அடையாளம் கண்டனர்.

இந்நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று நேற்றுக் காலை 6 மணிமுதல் யாழ்.மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின்போது 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

111 கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டன | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)