முஷாரப் இரங்கல்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

முஷாரப் இரங்கல்

கவிஞர் அன்புடீனின் மறைவு தென்கிழக்கின் கலைத்துறைக்கு பேரிழப்பாகும் இவ்வாறு திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆசுகவி அன்டீனின் மறைவு தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞரும் பன்முக எழுத்தாளருமான கவிஞர் அன்புடீனின் மறைவு பெருங்கவலையை தருகிறது. அவரின் இழப்பு இலக்கிய பரப்பில் குறிப்பாக தென்கிழக்கின் இலக்கிய வட்டத்தில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது.

நான் ஊடகப்பரப்பில் பணியாற்றிய காலம் தொட்டு தனிப்பட்ட ரீதியில் என்னோடு நெருக்கமான உறவை பேணியவர் கவிஞர் அன்புடீன்.

நான் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்னரும் எனது நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னரும் அழைப்பெடுத்து என்னோடு ஆசுவாசமாக பேசியவர். எனது தனிப்பட்ட வாழ்வு பக்கங்களையும் அவரோடு நட்பு ரீதியாக பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு என்னோடு மிகுந்த நட்புறவோடு பழகியவர் அன்புடீன். எமது வயது வித்தியாசங்கள் களைந்து அவரோடு கதைத்து சிரித்து மகிழ்ந்த நினைவுகள் இன்று எனக்கு மேலெழுகின்றன.

ஈழத்தின் இலக்கிய பரப்பின் புதிய தலைமுறைக்கான பாய்ச்சல் குறித்து விரிவான பார்வையுடன் இருந்தவர். தன் அந்திம காலம் வரையிலும் இலக்கிய பணியில் இடைவிடாது திளைத்தவர். புதிய சந்ததி எழுத்தாளர்களை வரவேற்கும் மனப்பக்குவமும், தட்டிக்கொடுக்கும் தளராத மனப்பாங்குமுடையவர் கவிஞர் அன்புடீன்.

வல்ல இறைவன் அவரின் இவ்வுலக வாழ்வை பொருந்தி, அன்னாரின் கப்று வாழ்வை வசந்தமாக்கி, மேலான சுவனபதியை அவருக்கு நசீபாக்குவானாக.

முஷாரப் இரங்கல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More