பால நிர்மானத்திற்கென நிதி ஒதுக்கீடு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பால நிர்மானத்திற்கென நிதி ஒதுக்கீடு

காத்தான்குடி கடற்கரை பால நிர்மாண பணிக்கான 25 மில்லியன் ரூபா போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் சுற்றாடல் அமைச்சருமான நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட காத்தான்குடி கடற்கரை றிஸ்வி நகர் பிரதேச பாலமும் வீதியும் மிக நீண்ட காலமாக நிர்மாணம் செய்யப்படாமல் காணப்பட்டது. கடந்த இரண்டு தசாப்தங்களாக இப்பிரதேசத்தில் இருந்த அரசியல்வாதிகள் இந்த பால நிர்மாண பணியினை செய்யாது புறக்கணித்திருந்தனர்.

இந்த பால நிர்மாணத்தின் முக்கியத்துவம் தொடர்பாக காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை பிரதசத்திலுள்ள மீனவர் அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் சுற்றுலாத் துறை தொடர்பான அமைப்புகள் கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் சுற்றாடல் அமைச்சருமான நசீர் அஹமட்டிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதற்கு அமைய அமைச்சரின் வேண்டுகோளிற்கினங்க கடந்த 2021ஆம் ஆண்டில் இதற்கான மதிப்பீட்டறிக்கை மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருந்த போதும் அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இவ்வேலைகள் ஆரம்பிப்பது தடைப்பட்டிருந்தது.

அமைச்சரின் முயற்சியின் பயனாக கடந்த ஓகஸ்ட் 16ஆம் திகதி இப்பால நிர்மாணத்துக்கான மீள் மதிப்பீட்டறிக்கை மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக தற்போது ரூபா 25 மில்லியன் இப்பால நிர்மாணத்திற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பால நிர்மானத்திற்கென நிதி ஒதுக்கீடு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More