கண்டியிலும் கையெழுத்துப் போராட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாழிபர் முன்னணி நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துவரும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் இலங்கையின் முக்கிய பிரதேசமான கண்டி மாநகரிலும் நடைபெற்றது.

கண்டி டொரிங்டன் ஜோர்ஜ் ஏ.டீ.சில்வா பூங்கா முன்பாக இக்கையெழுத்துப் போராட்டமும் எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

பெருந்தொகையான மக்கள் இப்போராட்டத்தின்போது தமது கையொப்பங்களை இட்டு பெரும் ஆதரவு நல்கினர்.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோருடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இதன் போது முக்கிய அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் மூவின மக்களுக்கும் பெரும் பாதகமாக அமைந்துள்ளதாகவும் இச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவூக் ஹக்கீம் இச்சட்டத்தை கையில் எடுத்து அரசாங்கம் பெரும் அராஜக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பாக சிறுபாண்மை இன மக்கள் இச்சட்டத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கண்டியிலும் கையெழுத்துப் போராட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House