நிந்தவூர் ஆதார வைத்தியசாலை ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க கோரி வெள்ளிக்கிழமை (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம், வைத்தியசாலை வீதியில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவையாளர்கள், சுகாதார சேவையாளர்கள் அடங்கலாக பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஏ. நஜீம் எடுத்துக்கொண்ட நடவடிக்கையின் பயனாக நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக இவர்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலை ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY