ரவூப் ஹக்கிமுடன் சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கையின் பிரபல சிங்கள இதழான “ராவய” பத்திரிகை புகழ் விக்டர் ஐவனுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கிமுடனான இச்சந்திப்பின்போது விக்டர் ஐவனுடன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான கொழும்பு தாருஸ்ஸலாமில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

முக்கிய இந்த சந்திப்பின் போது, சமகால அரசியல் மற்றும் நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சந்திப்பின் போது தலைவர் ரவூப் ஹக்கீமுடன், முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஷாம்தீன் ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர்.

ரவூப் ஹக்கிமுடன் சந்திப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House