புதிய செயலாளருக்கு வரவேற்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி ஜே.ஜே. முரளிதரனை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வும் சுகாதார நிறுவனங்களின் செயற்றிட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை மீளாய்வு செய்யும் கூட்டமும் இன்று திங்கட்கிழமை (21) கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம். தொளபீக் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது மாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளர், நினைவுச் சின்னங்கள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் அண்மையில் வெளியிடப்பட்ட அரண் காலாண்டு சஞ்சிகையும் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஆராய்ச்சிக்கும் அபிவிருத்திக்குமான பிரிவு மற்றும் சுகாதார தகவல் ஊடகப் பிரிவு என்பன மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.எம். வாஜித், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹிர் உட்பட வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

புதிய செயலாளருக்கு வரவேற்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House