இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியும் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக வெள்ளிக்கிழமை (28) காலை ஊர்காவற்துறை பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம் மற்றும் யாழ். மாவட்டக் கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து இந்த போராாட்டத்தை முன்னெடுத்திருந்தன.

ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசம் முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் அங்கிருந்து ஊர்காவற்துறை பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்றனர்.

பிரதேச செயலகத்துக்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதி மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் கையளித்தனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் கட்டுக்கடங்காமல் செல்வதனால் எமது கடல் வளங்கள், கடல் சூழல், உபகரணங்கள், வாழ்வாதாரங்கள் என்பன அழிக்கப்படுகிறன.

அதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றோம். பல தரப்புக்களிடமும் மகஜர்களை கையளித்துள்ளோம். இருந்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

வெளிநாட்டு மீனவர்கள் ஒழுங்குப்படுத்தல் தடைச்சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவேண்டும், உள்ளூர் இழுவைமடி தொழில் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் வேண்டும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் அழிக்கப்பட்ட எமது தொழில் உபகரணங்களின் மதிப்புகள் பல கோடி ரூபாய். அதற்கான நட்டஈடுகளை பெற்றுத்தர ஆவன செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலர்ந்துள்ள இந்த வருடத்துக்குள் எமக்கு தீர்வைப் பெற்று தர சகல தரப்பினர்களும் முயற்சிகளை முன்னெடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், கடல் வளத்தையும் காத்து எதிர்காலச் சந்ததியினரின் கைகளில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என போராட்டக்காரர்கள் கோரினர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House