அரச சேவை உறுதிமொழி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

புதிய வருடத்தில் முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை உறுதிமொழி (சந்தியப் பிரமாணம்) நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லதீப் தலைமையில், பிரதேச செயலக சகல உத்தியோத்தர்கள் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் சமய ஆராதனைகளுடன், தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் அடுத்து நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல் லதீப் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

மேலும் பிரதான நிகழ்வாக அரச சேவை உறுதிமொழியை உதவி பிரதேச செயலாளர் ஜெஸான் ஆசிக் வாசிக்க சகலரும் அதனை உச்சரித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்வில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லதீப் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“கடந்த வருடத்தில் கொவிட் - 19 அனர்த்த நெருக்கடிக்கு மத்தியிலும் நாம் பொதுமக்களுக்கான சேவைகளை சிறப்பாக முன்னெடுத்தோம்.

எனினும் தொடர்ந்தும் இந்த வருடம் மக்கள் சேவைக்காக, புடம் போட்டவர்களாக நம்மை மாற்றிமுன் நகர வேண்டும்.
அரச கருமம் என்பது பொது மக்கள் சார்ந்ததாக அமைய வேண்டும். இதனையே அரசும் எதிர்பார்க்கிறது என்பதைப் புரிந்து நாம் செயற்பட வேண்டும்.

எனவே அரச உத்தியோகத்தர்களாகிய நமது செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக அமைய வேண்டும்.

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் நம்மிடம் மக்கள் சார்ந்த நம்பிக்கைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதையும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

இதற்காக சவால்களை வெற்றி கொள்வதும் நமது பொறுப்பாகும்” என்றார்.

நிகழ்வில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். கே.எஸ்.எம்.றயீஸ் விசேட உரையாற்றினார்.

அத்துடன், உதவி பிரதேச செயலாளர் ஜெஸான் ஆசிக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார், நிதி உதவியாளர் எம்.வை.எம்.நஜீப், மேலதிக மாவட்ட பதிவதாளர் ஏ.எம்.எம்.கான், உட்பட உயர் உத்தியோகத்தர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்

அரச சேவை உறுதிமொழி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House