நல்லூர் வருகைதரும் பக்தர்கள் தங்க நகைகள் அணிவதைத் தவிருங்கள் -   பொலிஸ் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வருடாந்த உற்சவம்்நடைபெற்றுவரும் நல்லூர் கந்தன் ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்கள் தங்க ஆபரணம் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகே தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை (06) யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா நடைபெறுகிறது. ஆலய வளாகத்தில் தேவையான அளவு பாதுகாப்பு பொலிசாரினால் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு விசேட பொலிஸ் அணியும் இங்கே வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் மிகவும் முக்கியமான உற்சவமான நல்லூர் ஆலய உற்சவம் இடம் பெறுவதனால் இந்த ஆலயத்தில் வரும் அடியவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் காணப்படும். ஆலயத்துக்கு வருகின்ற பக்தர்களுக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கப்படுகின்றேன். தங்க ஆபரணங்கள் அணிந்து ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால், அதிக மக்கள் கூடும் இடத்தில் திருட்டு சம்பவங்களும் அதிகமாக இடம்பெற வாய்ப்புகள் அதிகமாக இருக்குமாதலால் அந்த திருட்டுக்களை தடுப்பதற்கு தங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் முக்கியமும் அவசியமாகும்.

திருட்டுச் சம்பவங்களை மேற்கொள்வதற்கு வெளிமாவட்டங்களிலிருந்து ஒரு சிலர் இங்கே அணியாக வந்து செயல்படுவார்கள். எனவே, தங்களுடைய நகைகள் மற்றும் அதிக பணங்களை ஆலயத்துக்கு வரும்போது எடுத்து வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அத்தோடு நல்லூர் வளாகத்தில் சிவில் மற்றும் பொலிஸ் சீருடையில் தேவையானளவு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பொதுமக்களின் அசட்டையீனத்தாலேயே அதிக திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

நல்லூர் வருகைதரும் பக்தர்கள் தங்க நகைகள் அணிவதைத் தவிருங்கள் -   பொலிஸ் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY