Varisu - வாரிசு - 28.08.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • சித்துவின் தகப்பன், பிரகாஷ், உடைய நிலைமைக்கு கணேஷ்தான் காரணம் என்று சொன்னது இன்று கணேஷே தன் வாயால் பிரகாஷுடன் பேசிக் கொண்டிருந்தனைக் கேட்க கூடியதாக இருக்கின்றது.
  • அதுமட்டுமல்லாமல், பிரகாஷுக்குத் தொடர்ந்து ஒரு மருந்தினை dripபினுள் ஏற்றி விட்டுக் கொண்டிருக்கின்றான், கணேஷன். அதனால்தான் பிரகாஷ் இதே நிலையினில் இருந்து கொண்டிருக்க வேண்டியதாக உள்ளது.
  • சித்து, தமிழை நண்பியாக ஏற்றுக் கொள்வதாக தமிழிடம் சொல்கையில், இதனை தமிழ் நம்பியதாக இல்லை, இப்போது. ஆனால், பின்பு என்ன நடக்குமோ என்பது பின்பு யோசிப்போம். ஆனால், இது கூடியிருந்து குழி பறிக்கும் திட்டம் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
  • குறிஞ்சிநாதன் தனது ஆளை கணேஷன் மூலம் ஜனாம்மாவின் ஆபீசிலே வேலைக்கு சேர்க்கும்படி அனுப்பி, அவனுக்கு வேலையும் கொடுத்தாயிற்றுது. ஆனால், ஒருதருக்கும் தெரியாது. வினோத்திற்கு கணேஷ் தான் சொல்கின்றேன் என்று சொன்னதினால், வினோத்தும் அமைதியானான்.
  • பங்குதாரர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டான் குறிஞ்சிநாதன். இதனை தான் கையாழுவதாக தமிழிடம் சொன்ன சிபீ, ஜனாம்மாவிற்குச் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான். சிபீயை நம்பிய தமிழுக்கு ஆப்பு வைக்கும் சிபீ. இதுதான் தமிழுக்கான முதற்கட்டம்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

வாரிசு | Varisu | 28.08.2025

சாமி விளக்கு அணைந்தது. கருத்தில் கொண்ட ஜனாம்மா. அடுத்த சோதனை ஒன்றினை காட்டிக் கொடுத்த முருகப் பெருமான். எண்ணை கூடியதினால்தான் சாமி விளக்கு அணைந்தது என்று தமிழ் விளக்குத் திரியினைப் பிழிந்து விட்டு கொழுத்திய அவளின் நம்பிக்கையினை கெடுக்க விரும்பாத ஜனாம்மா. ஏதோ அறிகுறியென்று கவலை கொண்டா.

தனது இந்த businessஇலே எவ்வளவோ தடைகளைத் தாண்டி ஜெயித்து வந்தவ ஜனாம்மா. தனது தொழிலிலே பலவிதமான உயர் பாராட்டுக்களைப் பெற்று தலை நிமிர்ந்து நிற்கின்றா. ஆனால், ஜனாம்மாவிற்கு வாய்த்ததுகள், மருமகன் கணேஷும் அவனது குடும்பமும், சிபீ, அவன் தாய் விலாத்து என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஜனாம்மாவின் மருமள், மீனா, அத்துடன் business எதிரிகள் ஜனாம்மாவைப் புடைசூழ எப்பவும் கண்காணித்து அவவை விழுத்துவதற்கு வலம் வந்து கொண்டிருக்கையிலே, ஜனாம்மாவால் என்னென்று கண்மூடி நித்திரை கொள்ள முடியும்?

பிரகாஷுக்கு, கணேஷன் dripபினுள்ளே மருந்தொன்றினை ஏற்றி அப்படியே சுயநினைவற்ற நிலையினிலே வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நாள், தமிழ் அவளது மாமா பிரகாஷுக்கு நெற்றியில் நீறு வைப்பதற்காக உள்ளே சென்று நீறினை வைத்தும் விட்டாள். அத்துடன், தவறுதலாக அந்த மருந்தேற்றப்பட்ட dripபானது தட்டுப்பட்டு கீழே சிந்திப் போனதினால், நேர்ஸைக் கூப்பிட்டு அதனை மாற்ற வைத்தா தமிழ். இதனால், போடப்படும் மருந்தின் வீரியம் இனி கொஞ்சம் குறையப் போகின்றது. அது மட்டுமல்லாமல், தமிழ், தாய் மாமனாரை வெளியில் கூட்டிக் கொண்டு போகின்றா. இதனைத் தடுத்த கணேஷினதும், மீனாவினதும் சொல்லைக் கேட்காமல் தமிழ் வெளியில் கூட்டிச் சென்றா.

சித்து தான் இனி நீ சொல்வது, ஜனாம்மா சொல்லும் எல்லாவற்றினையும் கேட்கின்றேன் என்பதனை கையைக் கொடுத்து அடித்துத் தமிழுக்குச் சொன்னான் சிபீ. ஜனாம்மாவிற்கு எப்படி கள்ளர்கள் கூட இருந்து குழி பறிக்கின்றார்களோ, அதேபோலத்தான் சிபீ தமிழுக்கு. ஒரு கட்டத்தில் தமிழ் சிபீயின் வாக்கினை நம்பி ஏமாறுவாள். இதனால் தமிழுக்கு பெரிய அவமானமும், கெட்ட பெயரையும் சம்பாதி்த்துக் கொடுப்பான் சிபீ.

ஆனால், சில சமயம், தான் திருந்தி விட்டேன் என்பதனை நிரூபிப்பதற்காக இந்த முறை குறிஞ்சிநாதனின் கேசிலே வெற்றி காண்பான், சிபீ. இதனால், தமிழ் சிபீயின் மேலே நம்பிக்கை கொள்ள வாய்ப்புகள் உண்டு. இப்படி தொடர்ந்து சில முயற்சிகளில் தமிழின் பக்கம் நின்று வெற்றி எடு்த்து தமிழுக்கு நல்லவனாக நடிப்பான், தமிழ் பூரணமாக தன்னில் நம்பிக்கை கொண்டு தன் அன்பினிலே விழும் மட்டும். அந்த நிமிடத்தில் சிபீ தனது உண்மையான சுயரூபத்தினைத் தமிழுக்குக் காட்டுவான். இந்த ஏமாற்றத்தில் சிபீயை நம்பிப் போன தமிழ் நொருங்கியே போவாள். அதையிட்டு றொம்ப, மிகவும் றொம்ப சந்தோஷத்திலே குதிப்பான் சிபீ. ஆனால், தமிழோ அழுதழுது துடிப்பாள். சிபீ சந்தோஷத்தில் மிதப்பான். ஷியாமிடம் சொல்லிச் சொல்லி கூத்தாடிக் கொண்டாடுவான். தமிழின் இந்த நிலையினைக் கண்ட கேடீ தமிழுக்கு சிபீயின் உண்மையான intensionச் சொல்லுவான். அதையும் கேட்டுத் துடிப்பாள் தமிழ்.

குறிஞ்சிநாதனால் அனுப்பப்பட்டவன் பிடிபடுவான். யாரு அவனைத் தன்னிடம்கூடச் சொல்லாமல் வேலைக்கு நியமித்தது என்று வினோத்தினைக் கடிந்து கொள்ள, கணேஷன் சார் உங்களிடம் சொல்வதாகச் சொன்னார் என்று உண்மையினை வினோத் சொல்ல, கணேஷன் தான் அத்தை உங்களுக்குச் சொல்ல நினைத்துவிட்டு மறந்து விட்டேன், என்று சொல்லி sorry சொல்லுவான், கணேஷன்.

குறிஞ்சிநாதனால் அனுப்பப்பட்டவன் ஜனாம்மாவின் வேலைத்தளத்திலுள்ள உள் விஷயங்களை கணேஷனின் உதவியுடன் எடுத்து, அதன் வெற்றிக்குரிய உள் விஷயங்களையும் வெளியே எடுத்து அங்கு குறிஞ்சிநாதனுக்கு அனுப்பிக் கொண்டிருப்பான். இதனால், இப்போது கிடைத்துள்ள அரச contractரானது தோற்றுப் போகும் சந்தர்பத்தினை உருவாக்குவான் குறிஞ்சிநாதன். அம்மாளாச்சியின் அருள் பெற்ற தமிழுக்கு அந்த ஆத்தாவே கனவில் சொல்லுவா, என்ன நடக்கப் போகின்றதென்று. அதனால், கடைசி நேரத்திலே தமிழ் அனைத்தையும் கண்டு பிடிப்பாள். குறிஞ்சிநாதனின் கூலிப்படையிலுள்ளவனும் பிடிபடுவான், கலைக்கப்படுவான். பொலிஸினால் கைதும் செய்யப்படுவான். குறிஞ்சிநாதன் மீதான குற்றவியல் சரித்திரம் அதிகரித்து அவனுக்கே தரித்திரமாகப் போய்விடும்.

இனி என்னதான் நடக்கலாம்?

  • கணேஷனுக்கும், குறிஞ்சிநாதனுக்கும் உள்ள தொடர்பினை வெளியில் கொண்டு வருவாள். இதனைச் சொல்லக் கூடாது என்றிருந்த தமிழ் வெளியில் சொல்லுவாள்.
  • ஜனாம்மா சொன்னதினை மறந்து விட்டாவோ? அதாவது, என்ன வேண்டுமென்றாலும் கேளு என்று தமிழுக்கு ஜனாம்மா சொன்னது ஞாபகம் இருக்கின்றதா உங்களுக்கு? என்னத்தினைக் கேட்பாள் தமிழ்? என்னத்தினை கொடுப்பா ஜனாம்மா? கொமேன்றில் சொல்லுங்கள்.
  • வீட்டிலிருக்கும் சேது, வீட்டில் தமிழுக்கு எதிரான ஒவ்வொருவரினுடைய நிலைமைகளை தமிழுக்கு update பண்ணிக் கொண்டிருப்பான்.
  • தமிழ் இனி செத்தாலும் சிபீயை நம்பவே மாட்டாள். ஆனால், சிபீக்கு ஒருநாள் தமிழின் உண்மையான மனம் விளங்கும். அப்போது, தமிழினைப் பற்றியும், அவளின் அன்பினைப் பற்றியும் அவனுக்கு ஏதோ ஒருவிதத்தினில் ஞாபகத்திற்கு வரும். அப்போது தமிழ் அழுது கொண்டிருந்ததனையும், அவளின் அந்த கவலை நிறைந்த மனத்தினையும், முகத்தினையும் அவனை அறியாமலே அவனின் நினைவினிலே அவனுக்குத் தோன்றும். அப்போது, சிபீ அவளிடம் நெருங்குவான் – தமிழ் விலகுவாள். உண்மையைக் கூறுவான் – பொய்யென விலத்துவாள். தனிப்பட்ட கதைகளை தவிர்ப்பாள். தானுண்டு, தன் குடும்பம் என்று வாழத் தொடங்குவாள்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!